தலச்சிறப்பு |
பிரளயம் ஏற்பட்டபோது உண்டான வெள்ளத்தை சுழித்து, சிவபெருமான் பூமிக்குள் அனுப்பிய தலமாதலால் இத்தலம் 'திருச்சுழியல்' என்ற பெயர் பெற்றது. பின்னர் காலப்போக்கில் மருவி 'திருச்சுழி' என்று அழைக்கப்படுகிறது.
ஒரு மூலவர் 'திருமேனிநாதர்' என்னும் திருநாமத்துடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'துணைமாலைநாயகி' என்னும் திருநாமத்துடன், இரண்டு திருக்கரங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி தேவசேனை சமேத சுப்பிரமண்யர், நடராஜர், சுழிகை கோவிந்தர், பிரளய லிங்கம், அறுபத்து மூவர், சப்த மாதர்கள், பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
ரமண மகரிஷி அவதாரம் செய்த தலம். கோயிலுக்கு அருகில் அவரது வீடு உள்ளது.
சிவபெருமானை மணந்துக் கொள்ள பார்வதி தேவி தவம் செய்த தலம்.
அர்ச்சுனன் வழிபட்ட தலம்.
சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|